08,May 2024 (Wed)
  
CH
வாழ்வியல்

பெண்கள் மெனோபஸ் காலகட்டத்துக்கு பிறகும் உடலுறவில் ஈடுபட முடியுமா? பாலியல் ஆரோக்கியத்தை நிர்வகிப்பது எப்படி?

பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையான உடலியல் ரீதியான ஹார்மோன் மாற்றங்களை அடைகிறார்கள். அவற்றின் இறுதிகட்டமாக கூட இந்த மெனோபஸ் இருக்கிறது என்று கூறலாம். மெனோபஸ் காலகட்டத்துக்குப் பிறகு நிறைய ஹாட் ஃபிளாஷ், மூட் ஸ்விங் ஆகியவை ஏற்படும் என்பார்கள். அது அவர்களுடைய பாலியல் வாழ்க்கையிலும் சில தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

உடலுறவு இன்பத்தை அனுபவிப்பதற்கு வயது என்பது ஒரு பொருட்டாக இருப்பதில்லை. மெனோபஸ் காலகட்டம் மற்றும் அதற்குப் பிறகான காலகட்டத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் பாலியல் உறவில் சில அசௌகரியங்களை ஏற்படுத்தலாம்.

ஹார்மோன் மாற்றங்களால் ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்ட்டிரோஸ்டிரோன் ஹார்மோன்களின் சுரப்பு குறைவதால் பாலியல் விருப்பம் குறைவது, உடலுறவின் போது வலியை உணர்தல் போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். ஆனாால் அது எல்லோருக்கும் ஏற்படுவதில்லை

மெனோபஸிற்கு பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பாலியல் ஈர்ப்பு குறைவது, ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி, பிறப்புறுப்பிறுப்பில் எப்பிதீலியம் ஜெல் (உயவுத்தன்மை ஏற்படுத்துவது) ஆகியவற்றின் குறபாட்டை சரிசெய்ய சில ஹார்மோன் தெரபிகளும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

எல்லாவற்றையும் விட மெனோபஸ் காலகட்டத்துக்கு பிறகும் உடலுறவு இன்பத்தை அனுபவிக்க வேண்டுமானால் அதற்கு லுப்ரிகேஷன்களை பயன்படுத்துவது, தம்பதிகளுக்கு இடையில் நிறைய பாலியல் தொடர்பான உரையாடல்களை நிகழ்த்துவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்

சிறுநீர் கழிக்கும்போது சிலருக்கு பாலுறவில் எட்டும் உச்சத்தைப் போல உச்சம் ஏற்படும். அதை தான் peegasms என்று கூறுவார்கள். பெரும்பாலும் பெண்களுக்கு தான் இந்த உணர்வு அதிகமாக இருக்கும்.

சிறுநீர்ப்பை நிரம்பியிருக்கும் போது, சிறுநீர்க்குழாய் மற்றும் கிளிட்டோரிஸ் உள்ளிட்ட பெண் எரோஜெனஸ் மண்டலங்களில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக இந்த உணர்வு ஏற்படுகிறது. அது சிறுநீர் கழிக்கும் போது, இந்த அழுத்தம் வெளியிடப்படுகிறது. இது ஒருவித உச்சகட்ட உணர்வை ஏற்படுத்துகிறது.

இந்த உணர்வை சில பெண்கள் விரும்புகிறார்கள். அதனாலேயே சில பெண்கள் வேண்டுமென்றே சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்து பீகாஸ்ம்களை ( peegasms)அனுபவிக்கிறார்கள். ஆனால் இப்படி சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது. அப்படி அடக்கும்போது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs)மற்றும் சிறுநீர் சொட்டு சொட்டாக வடிதல் போன்ற அபாயங்களை அதிகரிக்கச் செய்கின்றன

50 வயதைக் கடந்த பின்னும்கூட பாலியல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு பாலியல் குறித்து சரியான புரிதலும் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வும் பெற்றிருப்பது நல்லது.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் கூச்சப்படாமல் உங்களுடைய சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.

பாலியல் சார்ந்த நோய்த் தொற்றுக்கள் ஏற்படுவதைத் தடுக்கவும், தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கவும் பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வது மிக அவசியம்.

எல்லாவற்றையும் விட பிறப்புறுப்பு சுகாதாரத்தைப் பேணுவது மிகவும் முக்கியம்.

ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதவி செய்யும். அது பாலியல் ஆரோக்கியத்துக்கும் பொருந்தும்.

குறிப்பிட்ட வயதுக்கு மேலும் பாலியல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

பாலியல் உச்சம் என்பது நம்முடைய மூளையின் தூண்டுதலில் இருந்து தான் உணரப்படுகிறது. அதனால்தான் உச்சக்கட்டம் என்பதை வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல, மனமும் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த டயட்டை பின்பற்றும்போது அது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மனச்சோர்வு, பதட்டம் ஆகியவற்றைக் குறைத்து முழு பாலியல் ஈடுபாட்டையும் அதன்மூலம் மனநிறைவையும் கொடுக்கும்.

அதில் இன்னும் குறிப்பாக டார்க் சாக்லெட், அவகேடோ, க்ரீன் டீ, மாதுளை, வாட்டர்மெலன், பூசணி விதை ஆகிய சில உணவுகள் பாலியல் ஆர்வத்தையும் திருப்தியையும் அதிகரிக்கச் செய்யும்.

 




பெண்கள் மெனோபஸ் காலகட்டத்துக்கு பிறகும் உடலுறவில் ஈடுபட முடியுமா? பாலியல் ஆரோக்கியத்தை நிர்வகிப்பது எப்படி?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு