16,Jan 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றத்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் தொடர்பிலேயே வாக்குமூலம் பெறவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைப்பொன்று மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.


ஜனாதிபதி மாளிகையிலிருந்து மீட்கப்பட்ட பணம் இலஞ்சம் தொடர்பான குற்றங்களுக்குள் அடங்ககூடியதாக என்பது குறித்து விளக்கமளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.


இதேவேளை இந்த விசாரணைகள் குறித்து சிஐடியினருக்கு அளித்த இரண்டாவது வாக்குமூலத்தில் முன்னாள் ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களால் வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்குவதற்காக பொதுஜனபெரமுனவின் ஆதரவாளரான வர்த்தகர் ஒருவர் வழங்கிய பணம் அது என குறிப்பிட்டிருந்தார்.



எனினும் ஜனாதிபதி மாளிகைக்குள் அரகலய ஆர்ப்பாட்டகாரர்கள் நுழைந்ததை தொடர்ந்து ஆவணங்கள் காணாமல்போயுள்ளதால் யார் அந்த பணத்தை வழங்கியது என்பதை தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்





கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றத்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு