09,May 2024 (Thu)
  
CH
வாழ்வியல்

திருமணத்திற்கு முன் உடலுறவு கட்டாயம்

உலக நாடுகளில் பலவிதமான மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளன. நாகரிகம் , கலாச்சாரம் என்று பல விஷயங்கள் மாறினாலும் ஒரு சில விஷயங்கள் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொடரும் சிலத் தனித்துவ மரபுகள் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. ஆனால் பாரம்பரியத்தை அடிப்படையில் விடுவதில்லை.


அப்படி இந்தியாவின் சில கடைக்கோடி கிராமங்களிலும் பல பாரம்பரியங்கள் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. அதில் சில கொஞ்சம் வினோதமாக இருக்கின்றதோ என்று தோன்ற வைக்கின்றன.

இந்தியாவின் ஒரு பகுதியில் பாரம்பரியப்படி திருமணம் முடிந்த பிறகு தான் மணமக்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க வேண்டும் என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், இந்தியாவில் ஒரு கிராமத்தில் திருமணத்திற்கு முன் உடலுறவு என்பது கட்டாயமாக்கப்பட்ட பாரம்பரியம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?


இந்தியாவில் இப்படி ஒரு பழக்கமா என்று நீங்கள் ஆச்சரியப்படுவது புரிகிறது. ஆனால் உண்மை தான் மக்களே. இந்த பாரம்பரியம் சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் உள்ள முரியா பழங்குடியினரிடம் உள்ளது. இங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.

முரியா பழங்குடியினர் தங்கள் தனித்துவமான பாரம்பரியத்தை மதிக்கிறார்கள். அதை பாதுகாக்க இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அந்த பழங்குடியினத்தில் ஒரு பையன் 10 வயதுக்கு மேல் இருக்கும்போது, ​​அவனுடைய பெற்றோர் அவனை கோதலுக்கு அனுப்புகிறார்கள்


Ghotul என்பது இளம் ஆண்கள் பெண்களுடன் நேரத்தை செலவிட வடிவமைக்கப்பட்ட ஒரு இடம். ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்காக திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ்கின்றனர். இன்று நாம் சொல்லும் டேட்டிங் முறையை பல ஆண்டுகளாக அவர்கள் 'பாரம்பரியமாக' கடைப்பிடித்து வருகின்றனர்.

கோதுலுக்குச் செல்லும் இளைஞர்களும் யுவதிகளும் தங்கள் இஷ்டப்படி வாழ்வது மரபாக இருக்கிறது. அங்கு இளைஞர்களும் பெண்களும் திருமணத்திற்கு முன் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, தனது வாழ்க்கைக்கு ஏற்றவாரா என்று யோசித்து முடிவெடுக்க தரப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இணைகள் உடல் ரீதியாக தொடர்பு கொள்ளலாம். அதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.


இங்கு ஆண்களும் பெண்களும் எந்தவித சமூக அழுத்தமும் இல்லாமல் தங்கள் துணையை தேர்வு செய்யலாம். திருமணத்திற்கு முன் எத்தனை துணையை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். சில சமயத்தில் இப்படியான ஒரு சமூகம் இந்தியாவில் இருப்பது தான் ஆச்சரியமாக தோன்றுகிறது.




திருமணத்திற்கு முன் உடலுறவு கட்டாயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு