04,May 2024 (Sat)
  
CH
உலக செய்தி

கொரியா தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் உள்ள கடலில் வடகொரியா குரூஸ் ஏவுகணைகளை அடுத்தடுத்து செலுத்தியுள்ளது

ஆணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்துள்ளது. அதையும் தாண்டி அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தும்போதெல்லாம், தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கொரிய கடற்பகுதியில் ராணுவ பலத்தை அதிகரிக்கும். கடந்த புதன்கிழமை தென்கொரிய புகுதியில் அணுஆயுத ஏவுகணைகளை செலுத்தும் ஆற்றல் படைத்த அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தென்பட்டுள்ளது.


இதனால் கொரியா ஏவுகணைகளை வீசி எச்சரித்தது. இதற்கிடையே தென்கொரியாவில் அமெரிக்காவின் போர்க்கப்பல், ஏவுகணைகள் செலுத்தும் நீர்மூழ்கிக் கப்பல்கள், குண்டுகள் தென்கொரியா கடற்கரையில் காணப்படுவது, நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான அளவுகோல் என வடகொரிய எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில், தற்போது குரூஸ் ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசியுள்ளது. குரூஸ் ஏவுகணை வழிகாட்டுதல் ஏவுகணை என்றும் அழைக்கப்படும். தரை மற்றும் கடலில் எதிரிகளின் இலக்குகளை துல்லியாக கணக்கிட்டு தாக்கக்கூடிய வல்லமை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.




கொரியா தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் உள்ள கடலில் வடகொரியா குரூஸ் ஏவுகணைகளை அடுத்தடுத்து செலுத்தியுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு