29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

மணிப்பூரில் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற பெண்ணின் தாயார் பேட்டி

மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில், கடந்த புதன்கிழமை வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலாக அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். போலீயான ஒரு வீடியோவால் பழிக்குப்பழி கதையாக இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயார் என்.டி. டி.வி.க்கு கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

அதில் எனது கணவர் மற்றும் இளைய மகனையும் அந்த கும்பல் கொலை செய்துவிட்டனர். தற்போது உதவியற்றவளாக நிற்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். பேச்சு வராத நிலையில், ஆங்கில செய்தி சேனலுக்கு கண்ணீருடன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-


என்னுடைய மகளை நிர்வாணமாக்கி ஊர்வலாக அழைத்துச் செல்வதற்கு முன், என்னுடைய கணவர் மற்றும் இளைய மகனை அந்த கும்பல் கொலை செய்தது. ஒட்டுமொத்தமாக என்னுடைய நம்பிக்கையாக இருந்த எனது இளைய மகனை இழந்து விட்டேன். அவன் 12 ஆம் வகுப்பை முடித்தவுடன், கஷ்டப்பட்டாவது அவனை மேற்கொண்டு நல்லபடியாக படிக்க வைக்க நினைத்தேன்.

தற்போது அவனுடைய தந்தையும் இல்லை. என்னுடைய மூத்த மகனுக்கு வேலை இல்லை. ஆகவே, என்னுடைய குடும்பம் பற்றி நினைக்கும்போது, எந்த நம்பிக்கையும் இல்லாததுபோன்று உணர்கிறேன். நான் நம்பிக்கையற்றவளாக, உதவியற்றவளாக உணர்கிறேன் என்பதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை.


 என்னுடைய கிராமத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்த எண்ணம் எனது மனதில் தோன்றவில்லை. திரும்பி செல்ல விரும்பவில்லை. எங்களுடைய வீடு எரிக்கப்பட்டுள்ளது. வயல்வெளி அழிக்கப்பட்டுள்ளது. நான் எதற்காக திரும்பிச் செல்வேன். எனது கிராமம் சூறையாடப்பட்டு விட்டது. என்னுடைய மற்றும் என்னுடைய குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால், அங்கு திரும்பி செல்ல முடியாது.

அரசை நினைக்கும்போது கோபமாக வருகிறது. எனது கணவர் மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவளுக்கு எதிராக அவகரமான செயலை செய்துள்ளனர். நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். மணிப்பூர் அரசு எதுவும் செய்யவில்லை. இந்தியாவின் தாய், தந்தையர்களே, நாங்கள் அனைத்தையும் இழந்து, ஒரு சமூகமாக என்ன செய்ய போகிறோம் என்று சிந்திக்க முடியாமல் இருக்கிறோம். கடவுளின் ஆசியால், நான் உடல் ரீதியாக நன்றாக இருக்கிறேன், ஆனால் நான் இரவும் பகலும் அதைப்பற்றி சிந்திக்கிறேன். சமீப காலமாக நான் மிகவும் பலவீனமாக இருந்ததால் மருத்துவரை அணுகினேன். இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.




மணிப்பூரில் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற பெண்ணின் தாயார் பேட்டி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு