29,Apr 2024 (Mon)
  
CH
உலக செய்தி

டொனல்ட் டிரம்ப் 4 கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர் எனநீதிமன்றம் தீர்ப்பு

2020 அதிபர் தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்ததாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக 5-வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அமெரிக்காவை ஏமாற்றும் நோக்கில் சதி செய்தல், 20 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தல், உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை தடுக்க சதி செய்தல் மற்றும் 10 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட உரிமைகளை ஒருவர் நிறைவேற்ற முயலுவதை தடுக்க சதி செய்தல் என 4 முக்கிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இந்நிலையில், வாஷிங்டன் டி.சி. நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஆஜரானார். விசாரணையில், 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலை மாற்றி அமைப்பதற்கான தனது முயற்சிகள் தொடர்பான 4 கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கின் சாட்சியாகத் தெரிந்த எவருடனும் சட்ட வாயிலாக தொடர்பு கொள்ளக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் முன்னாள் அதிபர் விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது




டொனல்ட் டிரம்ப் 4 கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர் எனநீதிமன்றம் தீர்ப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு