28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளின் இணைய தளங்களில் சைபர் தாக்குதல்

கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இந்த சைபர் தாக்குதல் நடந்தது. இதனால் ஆஸ்பத்திரிகளின் கணினி அமைப்புகள் முடங்கியது. இதையடுத்து மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.


அறுவை சிகிச்சைகள், வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பிற சேவைகள் நிறுத்தப்பட்டன. சில அவசர அறைகள் மூடப்பட்டன. சைபர் தாக்குதல் மூலம் ஆஸ்பத்திரிகளின் தகவல்களை திருட வாய்ப்பு இருந்ததால் அதை தடுக்க, சர்வர்கள் ஆப்லைனில் வைக்கப்பட்டது.

இதையடுத்து சைபர் தாக்குதலில் இருந்த கணினி அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சைபர் தாக்குதல் பற்றி அறிந்ததும் கணினி அமைப்புகள் ஆப்லைனில் வைக்கப்பட்டது.


சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் உதவியுடன் விசாரணையை நடத்தி வருகிறோம். நோயாளிகளின் அவசர தேவைகளை நிவர்த்தி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். விரைவாக இயல்பான செயல்பாடுகளுக்கு திரும்புவதற்கு செயல்படுகிறோம். சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட ஆஸ்பத்திரிகளில் இருந்த நோயாளிகள் மற்ற ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சைபர் தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

 




அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளின் இணைய தளங்களில் சைபர் தாக்குதல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு