08,May 2024 (Wed)
  
CH
உலக செய்தி

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் 19 பேர் சரண்

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.

ராணுவத்தினரின் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகளும் அவ்வப்போது பதில் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

இதற்கிடையில் தலிபான் பயங்கரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சமீபகாலமாக அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பல கிராமங்களை மீட்டுவருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ஹிரேட் மாகாணம் கிரிஸ்டி ஷரிப் மாவட்டத்தை சேர்ந்த 19 தலிபான் பயங்கரவாதிகள் அரசுப்படையினரின் தாக்குதலுக்கு அஞ்சி தங்கள் ஆயுதங்களை கைவிட்டு இன்று ராணுவத்திடம் சரண் அடைந்தனர்.

சரணடைந்த பயங்கரவாதிகள் இனிமேல் போரில் ஈடுபடமாட்டோம் எனவும் சாதாரண ஆப்கன் குடிமக்களாக அமைதியாக வாழ விரும்புவதாக உறுதியளித்தனர்.

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திவரும் அதிரடி தேடுதல் வேட்டை காரணமாக ஜனவரி மாதத்தில் மட்டும் 400-க்கும் அதிகமான தலிபான், ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  






ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் 19 பேர் சரண்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு