08,May 2024 (Wed)
  
CH
உலக செய்தி

31ம் தேதி நள்ளிரவு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறலாம் - ஐரோப்பிய பாராளுமன்றம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் மசோதா பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு பாராளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாமல் இருந்த நிலையில், 2 முறை இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. இரண்டு முறை பிரதமர்களும் மாறினர்.

இதையடுத்து தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால் பிரெக்சிட் வரைவு மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற ஒப்புதலை பெற்ற பின்னர், பிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் தனது ஒப்புதலை அளித்தார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முழுவதும் வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் டேவிட் சசோலி கூறுகையில், ‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் வாக்களித்து ஒப்புதல் வழங்கியுள்ளது. இனி ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் விலகுவதற்கான இறுதி ஒப்புதலை அளிக்க வேண்டும், அதன் பின்னர் (2020) ஜனவரி 31ம் தேதி நள்ளிரவு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முறையாக வெளியேறலாம்.

முதல் முறையாக, ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஒன்றியத்தை விட்டு வெளியேறுகிறது. இது வருத்தமளிக்கக்கூடியது என்றாலும், ஐரோப்பிய பாராளுமன்றம் பிரிட்டன் மக்களின் விருப்பத்திற்கு எப்போதும் மதிப்பளிக்கிறது’ என கூறினார்.

 





31ம் தேதி நள்ளிரவு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறலாம் - ஐரோப்பிய பாராளுமன்றம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு