பல்கேரியா நாட்டில் அரசின் அனுமதியுடன் விசித்திரமான சந்தை ஒன்று உள்ளது. அது என்னவெனில் பெண்களை விற்கும் ‘மணமகள்’ சந்தையே அதுவாகும்.
இந்த சந்தையில் பெண் கிடைக்காதவர்கள் அலைந்து திரிந்து தமக்கு பிடித்த மணமகளை தேர்ந்தெடுத்து வாங்குவர்.
இந்த சந்தையானது அந்நாட்டில் அனைத்து பெண்களுக்கும் பொருந்தாது, ஏழை பெண்களுக்காக மட்டுமே இந்த மணமகள் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
சந்தையில் விற்கப்படும் மணமகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பல நிபந்தனைகள் வைக்கப்படுகின்றன. கலையடி சமூகத்தினர் தங்களின் மகள்களை இந்த சந்தையில் விற்கின்றனர்.
இந்த பெண்களை வாங்கும் ஆண் மகனும் அதே சமூகத்தை சேர்தவனாக இருக்க வேண்டும். மேலும், இந்த சந்தையில் விற்கப்படும் பெண் ஏழையாக இருப்பது அவசியம். பொருளாதார பலமுள்ள குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை விற்க முடியாது.
இத்துடன் வாங்கிய பெண்ணுக்கு மருமகள் அந்தஸ்தை ஆணின் குடும்பம் கட்டாயம் வழங்க வேண்டும். பல்கேரியாவின் இந்த விசித்திர மணமகள் சந்தை அனைவராலும் அதிசயமாக பார்க்கப்பட்டு வருகிறது.
0 Comments
No Comments Here ..