28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்து எரிந்ததில் 68 பேர் உடல் கருகி பலி

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்து எரிந்ததில் 68 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன் 105 பேர் காணால்போன நிலையில், 300 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

தென்மேற்கு ஆசிய நாடான அசர்பைஜானுக்கு சொந்தமான நாகோர்னோ - கராபாக் பகுதியில் இராணுவம் அதிரடியாக களமிறங்கியது. அப்போது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பிரிவினைவாதிகள் சரண் அடைந்தனர். இந்த பதற்றமான சூழ்நிலை காரணமாக அங்கிருந்தவர்கள் அர்மீனியாவுக்கு தப்பி செல்ல முயன்றனர்.



இதனால் அசர்பைஜானின் ஸ்டெபனகெர்ட்டில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக ஏராளமான கார்கள் அணிவகுத்து நின்றன.

அப்போது அந்த எரிபொருள் நிலையம் திடீரென தீப்பிடித்து எரிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் பல கார்கள் தூக்கி வீசப்பட்டன. மேலும், இந்த தீ விரைவில் அருகில் உள்ள ஏனைய பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.


இந்த தீ விபத்தில் 68 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 




அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்து எரிந்ததில் 68 பேர் உடல் கருகி பலி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு