இந்த தற்கொலை குண்டுதாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.முகமது நபியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களிற்காக பெருமளவு மக்கள் திரண்டிருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தற்கொலை குண்டுதாக்குதலே இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற இடத்திலிருந்து பல அம்புலன்ஸ்கள் மருத்துவமனை நோக்கி செல்கின்றன படுபயங்கரம் என பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சம்பவத்தை வர்ணித்துள்ளார்
0 Comments
No Comments Here ..