சுதந்திர தினத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் வாகனப் பேரணி ஒன்று இன்று (04) இடம்பெற்றது.
வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் பேரணியில் மோட்டர் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள் ஊர்வலமாக வந்திருந்திருந்தன. அனைத்து வாகனங்களிலும் தேசியக்கொடிகள் கட்டப்பட்டு சுமார் நூறு வரையிலான வாகனங்கள் பேரணியாக வவுனியா நகரை வலம் வந்திருந்திருந்தன. இப் பேரணியில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகே ஆரம்பமான வாகனப்பேரணியானது A9 வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியினை வந்தடைந்து பஜார் வீதியூடாக மணிக்கூட்டு கோபுர சந்திக்கு வந்து மீண்டும் A9 வீதியூடாக பயணித்து குடியகல்வுத் திணைக்கள வீதியூடாக சென்று புகையிரத நிலைய வீதியினை சென்றடைந்து, வவுனியா - மன்னார் பிரதான வீதியூடாக மீண்டும் பேரணி ஆரம்பித்த இடத்தினை சென்றடைந்திருந்தது.
குறித்த பேரணியை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் நேரடியாக பேரணியில் கலந்து கொண்டு ஒழுங்கமைத்திருந்ததுடன், சிவசேனை அமைப்பினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..