05,Dec 2024 (Thu)
  
CH
BREAKINGNEWS

மாமியாரை படுகொலை செய்த மருமகன்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மருமகன் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று (23) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழசைசேனை பொலிசார் தெரிவித்தனர்.வாகனேரி கூளையடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வைரமுத்து கோமதனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகளுக்கு திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ள நிலையில் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது தாயாருடன் குழந்தைகள் மற்றும் அவரது கணவன் வாழ்ந்து வருகின்றனர்.


இந்த நிலையில் மருமகன் மதுபோதையில் மாமியாருடன் தினமும் சண்டையிட்டு வந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று இரவு மாமியார் வீட்டில் தனிமையில் இருந்துள்ள போது மது போதையில் வந்த மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.இதன்போது, மாமியாரின் தலை மீது பாரிய பொருள் ஒன்றால் தாக்கியதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.


பின்னர், 30 வயதுடைய மருமகன் அங்கிருந்து தப்பிஓடியுள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அயவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




மாமியாரை படுகொலை செய்த மருமகன்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு