10,May 2024 (Fri)
  
CH
SRILANKANEWS

கச்சதீவு திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று இடம்பெற்றன.

வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு நாளை இன்று 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து 4354 பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர் .இந்திய பக்தர்கள் இந்திய மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி எவரும் வருகை தரவில்லை .

இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்றைய திருவிழாவில் கடற்படை உயர் அதிகாரிகள் ஜனாதிபதியின் செயலாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




கச்சதீவு திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு