20,May 2024 (Mon)
  
CH
WORLDNEWS

கனடா செல்ல வேண்டுமா – விசா நடைமுறையில் மாற்றம்!

கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வாழ்க்கைத் துணைக்கான விசா பெறுவதற்கான விதிகளை கடுமையாக்க உள்ளதாக அறிவித்துள்ளன. கனடாவின் ஐஆர்சிசி அமைச்சர் மில்லர் கருத்துத் தெரிவிக்கையில், ​​“கனடாவுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வீடு, சுகாதாரம் மற்றும் பிற வசதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இங்கு வரும் மாணவர்கள் தீய சக்திகளின் வலையில் சிக்காமல் இருக்கவும் கனடாவின் மக்கள்தொகை நிலையானதாக வளரவும் வேண்டும் என்பதே எங்கள் முயற்சி என குறிப்பிட்டுள்ளார். முதுநிலை அல்லது முனைவர் பட்டத்திற்கு படிக்கும் சர்வதேச மாணவர்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கைத் துணையை அழைக்க வாழ்க்கைத் துணை விசாவைப் பயன்படுத்த முடியும் என்று கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


அதற்கும் குறைந்த படிப்புகளில் படிக்கும் மாணவர்கள், இந்த விசாவில் தங்கள் வாழ்க்கைத் துணையை கனடாவுக்கு அழைக்க முடியாது. கூடுதலாக, ஸ்பான்சர் செய்யும் பார்ட்னர், கனடா குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியிருப்பாளராகவோ இருக்க வேண்டும். இயலாமை தவிர வேறு காரணங்களுக்காக அவர்கள் சமூக உதவியைப் பெறவில்லை என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். அவர் தன் வாழ்க்கைத் துணையின் நிதித் தேவைகளை மூன்று வருடங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.


இதனால் அந்நாடுகளில் பணிபுரிவோர் தங்களது வாழ்க்கைத் துணையை உடன் அழைத்துச் செல்வது இனி கடினமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.




கனடா செல்ல வேண்டுமா – விசா நடைமுறையில் மாற்றம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு