19,Jul 2025 (Sat)
  
CH
WORLDNEWS

டிரம்ப் கால்களில் வீக்கம்: நரம்பு நோய் என வெள்ளை மாளிகை அறிவிப்பு!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கால்களில் வீக்கம் ஏற்பட்டதையடுத்து, அவருக்கு சமீபத்தில் நரம்பு நோய் (Venous insufficiency) இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், செய்தியாளர்களிடம் கூறுகையில், டிரம்ப் சமீபத்தில் கால்களில் ஏற்பட்ட வீக்கத்திற்கான சோதனைகளை மேற்கொண்டார். இந்த நிலை, கால்களில் இருந்து இதயத்திற்கு இரத்தம் சரியாகத் திரும்பாததால் ஏற்படுகிறது. இது நரம்பு பற்றாக்குறையின் சிக்கலாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.


டிரம்புக்கு இதய செயலிழப்பு அல்லது சிறுநீரக பாதிப்புக்கான எந்த அறிகுறிகளும் அடையாளம் காணப்படவில்லை என்றும் லீவிட் உறுதிப்படுத்தினார். ஜனாதிபதி உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து எந்தக் கவலையும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.




டிரம்ப் கால்களில் வீக்கம்: நரம்பு நோய் என வெள்ளை மாளிகை அறிவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு