சீனாவின் வூஹான் நகரில் இருந்த இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வூஹான் நகரில் இருந்து இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு முன்வந்த இலங்கை விமான சேவை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டுக்கு அழைத்துவரப்படும் மாணவர்களுக்காக 72 மணி நேரத்திற்குள் தியத்தலாவையில் வைத்திய முகாம் ஒன்றை அமைத்துக் கொடுத்த இராணுவ அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
0 Comments
No Comments Here ..