தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடைவிதிப்பதானது இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களை வேறு நாட்டுப் பிரஜைகள் போல் கருதுவதாகவே புலப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்
மட்டகளப்பு ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிங்கள மொழிக்கு காணப்படுகின்ற அத்தனை உரித்துக்களும் தமிழ் மொழிக்கு காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், தேசிய கீதத்தைச் சிங்களத்தில் மாத்திரம் பாட வேண்டும் என கூறுவது மனித உரிமை மீறலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்
மேலும், இதன்மூலம் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்திவிட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..