10,May 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

எல்ல பகுதியில் காட்டுத்தீ - 7 ஏக்கர் நிலப்பரப்பு நாசம்

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலஅல்ப கொடமடித்த காட்டுப்பகுதியில் நேற்று (02) முதல் இரண்டு நாட்கள் தொடர்ந்து எரிந்து வருகின்ற காட்டுத்தீயினால் 7 ஏக்கரிற்கு மேற்பட்ட பகுதி எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது இப்பிரதேசங்களில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் கடும் காற்று காரணமாக தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இனந்தெரியாத சிலரால் இப்பகுதிக்கு தீ வைத்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.

தற்போது பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நீர்ப்போசண வனப்பிரதேசங்களுக்கு தீ வைப்பதனால் மேலும் நீர்த்தட்டுப்பாடு உக்கிர நிலையை அடைய வாய்ப்பிருப்பதாகவும், ஆகவே இவ்வாறு தீ வைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.




எல்ல பகுதியில் காட்டுத்தீ - 7 ஏக்கர் நிலப்பரப்பு நாசம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு