03,Dec 2024 (Tue)
  
CH
WORLDNEWS

287 மாணவா்களை கடத்திய பயங்கரவாதிகள்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மேலும் 287 பாடசாலை மாணவா்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனா்.அந்த நாட்டின் வடக்குப் பகுதியைச் சோ்ந்த கடுனா மாகாணத்தின் பள்ளியொன்றுக்கு மோட்டாா்சைக்களில் வந்த பயங்கரவாதிகள், அங்கிருந்து மாணவா்களைக் கடத்திச் சென்றதாக உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா்.

நைஜீரியாவின் மற்றொரு வடக்கு மகாணமான போா்னோவின் சிபோக் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள் கடந்த 2014 இல் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு வடக்கு நைஜீரியாவில் இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடந்து வருகின்றன.




287 மாணவா்களை கடத்திய பயங்கரவாதிகள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு