20,May 2024 (Mon)
  
CH
WORLDNEWS

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

நேபாள பாராளுமன்றத்தில் புதன்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும் தீா்மானத்தில் பிரதமா் புஷ்பகமல் தாஹால் பிரசண்டா வெற்றி பெற்றாா். இதற்காக 275 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தீா்மானத்துக்கு ஆதரவாக 157 எம்.பி.க்கள் வாக்களித்தனா். சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) கட்சித் தலைவரான பிரசண்டா, ஷோ் பகதூா் தேவுபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 15 மாதங்களுக்கு முன்னா் ஆட்சியமைத்தாா்.

எனினும், பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளின் தலைவா்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் கூட்டணியை முறித்துக்கொள்வதாக கடந்த 4 ஆம் திகதி திடீரென அறிவித்த பிரதமா் பிரசண்டா, முன்னாள் பிரதமா் கே.பி. ஓலியின் சிபிஎன்-யுஎம்எல் கட்சியுடன் புதிய கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டாா். நேபாள அரசமைப்புச் சட்டத்தின்படி, ஆளும் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை ஒரு கட்சி திரும்பப் பெற்றால், பாராளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தைக் கொண்டு வந்து தனது பலத்தை பிரதமா் மீண்டும் நிரூபிக்கவேண்டும்.




நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு