03,May 2024 (Fri)
  
CH
உலக செய்தி

கொரோனாவால் 478 பேரின் நிலைமை கவலைக்கிடம் -சீனா சுகாதார அமைச்சு தகவல்

உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள உயிர்களை காவுகொள்ளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 478 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சீனா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.

இந்நிலையில் தற்போதுவரை, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 360 ஆக அதிகரித்துள்ளதோடு இந்த வைரஸ் தொற்று காரணமாக 17 ஆயிரத்து 384 பேர் தற்போவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகளவிலான மரணங்கள் சீனாவின் வுஹான் நகரின் ஹூபெய் பிராந்தியத்தில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வைரஸ் தொற்று காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் மிகவும் தீவிரமான கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றன.

இந்த வைரஸ் தொற்று தாய்லாந்து, ஜப்பான், ஹொங்காங், சிங்கப்பூர், தைவான், அவுஸ்ரேலியா, மலேசியா, மக்காவ், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, தென் கொரியா, ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா, பிரித்தானியா, வியட்நாம், இத்தாலி, இந்தியா,பிலிப்பைன்ஸ், நேபாளம், கம்போடியா, இலங்கை, பின்லாந்து, சுவீடன் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




கொரோனாவால் 478 பேரின் நிலைமை கவலைக்கிடம் -சீனா சுகாதார அமைச்சு தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு