15,Jan 2025 (Wed)
  
CH
WORLDNEWS

வரலாற்று சாதனை படைத்த சிறுமி!!

லண்டன் வாழ் தமிழ் சிறுமியான போதனா சிவானந்தன் தனது 8 வயதிலேயே கான்டினென்டல் போட்டியில் வெற்றி பெற்று ஐரோப்பாவின் சிறந்த பெண் செஸ் வீராங்கனையாக தெரிவாகி வரலாறு படைத்துள்ளார்.


இவர் பற்றிய ஒரு சுவாரஸ்ய கதை இதோ!

2020 ஆம் சிறுமி போதனாவின் தந்தை சிவானந்தன் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். குறித்த நண்பர் தற்போது குடியிருக்கும் வீட்டை விட்டு மற்றொரு வீட்டு மாறியுள்ளார். இதன்போது பழைய வீட்டிலிருந்து பொருட்களை எல்லாம் புது வீட்டிற்கு எடுத்து செல்ல சிவானந்தன் உதவி செய்துள்ளார். அப்போது, நண்பரின் வீட்டில் பழைய புத்தகங்கள், அதிகமாக இருப்பதை கண்டு சிவானந்தன் நண்பரிடம் இதனை தான் என் வீட்டிற்கு எடுத்து கொண்டு போகவா என கேட்டுள்ளார் அதற்கு நண்பர் எடுத்து கொண்டு போங்கே என கூறியுள்ளார்.

இதனை அடுத்து சிவானந்தன் புத்தகங்களை எடுத்து கொண்டு இருக்கும் போது அங்கு புத்தகங்களுடன் புத்தகமாக போர்டு இருந்துள்ளது. அது என்னென்று பார்த்தால் அதுதான் செஸ் போர்டு அதனையும் சிவானந்தன் புத்தகங்களுடன் எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றுளார். சிவானந்தனுக்கு சிறிய வயதில் இருந்தே செஸ் மீது ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது. இதனால் அவர் குறித்த செஸ் போர்டையும் நண்பர் வீட்டில் இருந்து எடுத்துகொண்டு வந்துள்ளார். பின்னர் புத்தங்களையும், செஸ் போர்டையும் மகள் போதனாவிடம் காண்பித்துள்ளார். இதனை பார்த்த சிறுமி போதனாவிற்கு செஸ் மீது ஒரு அர்வம் வந்து நான் இதை கற்றுக்கொள்ள போவதாக தந்தையிடம் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து தந்தையும், செஸ்ஸில் தனக்குத் தெரிந்ததையும், மற்றும் யூடியூபில் பார்த்தும் மகள் போதனாவுக்கு கற்று கொடுத்துள்ளார். இதேவேளை கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு நாடு முழுவதும் அழுல்ப்படுத்தப்பட்டதால் சிறுமி படிப்பு போக முழு நேரம் செஸ் மீது அதிக கவனம் செலுத்தியுள்ளார். பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டயுடன் சிறிய அளவிலான போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற ஆரம்பித்தவுடன் அவருடன் பாடசாலையில் முதல் தர போட்டியாளராக மாறியுள்ளார்.


அப்படியிருக்கும் போது கடந்த 2023 டிசம்பர் மாதம் குரோஷியா நாட்டில் நடந்த ஐரோப்பிய ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று 2023 க்கான சிறந்த பெண் செஸ் வீராங்கனையாக தெரிவாகியுள்ளார். இந்த செய்திகள் உடனடியாக பிரித்தானியாவில் உள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதங்களில் பரவியது. இன்றைய திகதிகளில் போதனா பிரித்தானியாவின் மிக மிக்கிய சதுரங்க போட்டியளாராக உள்ளார்.





வரலாற்று சாதனை படைத்த சிறுமி!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு