யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலையில் நேற்றிரவு(25) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சொகுசு பஸ்ஸொன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்ததாகவும் சொகுசு பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments
No Comments Here ..