மாத்தளை மாவட்டம் வரக்காமுறை பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் பெண் ஒருவரும் இளைஞன் ஒருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்றையதினம் (25.03.2024) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாத்தளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த காருடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதன்படி, மோட்டார் சைக்கிளில் பயணித்த 31 வயதுடைய பெண் ஒருவரும் 26 வயதுடைய இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..