09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

தேசிய கீதம் இசைக்கும் போது மரியாதை கொடுக்காத ட்ரம்ப்

பொதுவாகவே தேசிய கீதம் இசைக்கும்போது நேராக நிமிர்ந்து அசைவற்று நிற்பதுதான் தேசிய கீதத்துக்கு நாம் செய்யும் மரியாதை.

இது காலங்காலமாக இருந்து வரும் பழக்கம் ஆகும்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது கையையும் காலையும் ஆட்டி தேசியகீதத்தை அவமரியதை செய்துள்ளார்.

இந்நிலையில் அவரின் இந்த செயலானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மற்றவர்கள் அனைவரும் தேசிய கீதத்துக்கு நேராக நின்று மரியாதை செலுத்த இவர் மட்டும் கையையும் காலையும் ஆட்டி இசையமைப்பாளர் போல் செயல்பட்டது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து ரோட் தீவு காங்கிரஸ் உறுப்பினர், டேவிட் சிசிலைன் ட்ரம்ப்பை விமர்சித்து டுவீட் செய்கையில், நாட்டுப்பற்றுக்கே தான் உதாரணம் என்று கூறிக்கொள்பவரின் செய்கை இதுதான். தேசிய கீதம் மேல் அவருக்கு மரியாதை இருப்பதாகத் தெரியவில்லை என டிரம்பை விமர்சித்துள்ளார்.

இதேவேளை ஃபர்ஸ்ட் லேடி மெலானியா ட்ரம்பிற்கு மாறாக தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.





தேசிய கீதம் இசைக்கும் போது மரியாதை கொடுக்காத ட்ரம்ப்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு