25,Dec 2025 (Thu)
  
CH
WORLDNEWS

பிரித்தானியாவில் பல விமான சேவைகள் திடீரென ரத்து!

மோசமான வானிலை காரணமாக பிரித்தானியாவில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. "கெத்லீன்" புயலுடன் கூடிய பலத்த காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்புகளுக்கு அமைய விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, பிரித்தானியாவில் சுமார் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மோசமான வானிலையால் ஸ்கொட்லாந்திலும் ரயில் மற்றும் படகு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காற்றின் நிலை காரணமாக, இங்கிலாந்தின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.





பிரித்தானியாவில் பல விமான சேவைகள் திடீரென ரத்து!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு