19,Apr 2024 (Fri)
  
CH
ஜரோப்பா

பிரஸ்ஸல்ஸின் விதிகளைப் பின்பற்றத் தேவையில்லை : பிரமர் பொரிஸ் ஜோன்சன்

பிரஸ்ஸல்ஸின் விதிகளை, பிரித்தானியா பின்பற்றத் தேவையில்லை என்று கூறியுள்ள பிரமர் பொரிஸ் ஜோன்சன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கான தனது திட்டத்தை வகுத்துள்ளார்,

கனடியப் பாணியிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதுடன் அத்தகைய ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் பிரித்தானியா மீளப்பெறும் ஒப்பந்தத்திற்கு திரும்பும் என்றும் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கனடா பாணியிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால், உலக வர்த்தக அமைப்பு (WTO) விதிமுறைகளுக்கு பிரித்தானியா திரும்புவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவித்தார்.

நாம் எமது தேர்வைச் செய்துள்ளோம். கனடாவைப் போலவே ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புகிறோம். அவ்வாறான ஒப்பந்தங்கள் ஏற்படாவிடின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான எமது தற்போதைய மீளப்பெறும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வர்த்தகம் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியம்-கனடா ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளுக்கிடையில் பெரும்பாலான பொருட்களின் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது. ஆயினும் சுங்கம் மற்றும் பெறுமதி சேர் வரிகள் நடைமுறையில் உள்ளன.

வங்கி போன்ற சேவைகள் பிரித்தானியாவுக்கு மிகவும் முக்கியமானது. எனினும் கனடாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இச்சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மிஷேல் பார்னியர் கூறுகையில்; தமது வர்த்தக ஒப்பந்தச் சலுகைக்கு நிலையான களம் தேவை என்று கூறியுள்ளார்.

மேலும் மீன்பிடி நீர்ப்பரப்பில் பரஸ்பர அனுமதி இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.





பிரஸ்ஸல்ஸின் விதிகளைப் பின்பற்றத் தேவையில்லை : பிரமர் பொரிஸ் ஜோன்சன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு