03,May 2024 (Fri)
  
CH
விளையாட்டு

ரி-20 உலகக்கிண்ணத்திற்கு ஐ.பி.எல். சிறந்த அடித்தளமாகும் – விராட் கோலி

ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கு தயாராக சிறந்த அடித்தளம் ஐ.பி.எல். தொடர்தான் என்று இந்திய அணித்தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ரி-20 உலகக்கிண்ணத் தொடர் அவுஸ்ரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை இடம்பெறுகிறது.

இந்தத் தொடருக்கு முன் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும், தென்னாபிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் விளையாட இருக்கிறது.

உலகக் கிண்ணத்திற்குத் தயாராவதற்கு இந்த ஆறு போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்கும் ஐ.பி.எல் தொடர்தான் ரி-20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகுவதற்கு சரியான அடித்தளம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ”நாங்கள் ஐந்து ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளோம். இன்னும் அதிகமான ரி-20 போட்டிகள் இல்லை. ஐ.பி.எல் தொடரில் இரண்டரை மாதம் ரி-20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறோம். அதை சரியான பயன்படுத்தி கொள்ளலாம். ஐபிஎல் சரியான அடித்தளமாகும்.

ஏனென்றால், கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கு போதுமான அளவு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை” என்றார்.





ரி-20 உலகக்கிண்ணத்திற்கு ஐ.பி.எல். சிறந்த அடித்தளமாகும் – விராட் கோலி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு