ஈரான் ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன்னர் ஜனாதிபதி அலுவலகத்தை வந்தடைந்ததுனர்.
இதன்போது ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
அதன்பின், ஈரான் ஜனாதிபதிக்கு முப்படையினால் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது.
0 Comments
No Comments Here ..