22,May 2025 (Thu)
  
CH
BREAKINGNEWS

பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!

பொலன்னறுவை, இசட் டி கால்வாயுடன் இணைக்கப்பட்ட கால்வாயில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்தது. கால்வியில் விழுந்த குழந்தையை தமது வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பிரதேசவாசி ஒருவர் பார்த்துள்ளார். பொலன்னறுவை, வெலிகந்த, சிங்கபுர, ஜெயவிக்ரம கிராமத்தை சேர்ந்த இசுரு ஜயநாத் பண்டார என்ற ஒரு வயது மற்றும் பத்து மாதமான ஆண் குழந்தையே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தது.

குறித்த குழந்தை தனது தாயுடன் இந்த கால்வாக்கு வருவது வழக்கம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதனால் குழந்தையின் பாதுகாப்பு கருதி கால்வாயிக்கு தனியாக வருவதைத் தடுக்க குடியிருப்பாளர்கள் வீட்டைச் சுற்றி சிறிய வேலி அமைத்திருந்தனர்.

நேற்று (26) பிற்பகல் தாய் வீட்டில் இல்லாத போது, ​​குழந்தை தனது மூத்த சகோதரியுடன் யாருக்கும் தெரியாமல் கால்வாயிக்கு சென்றுள்ளனர். இந்த பாதுகாப்பு வேலியின் கதவு திறந்திருந்ததால் குழந்தை திடீரென கால்வாய் அருகே வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

தங்கள் குழந்தை வீட்டில் இல்லாததை அவதானித்த உறுவினர்கள், அப்பகுதி மக்களின் உதவியுடன் குழந்தையை தேடிய போதும், குழந்தை கிடைக்கவில்லை. குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மணி நேரம் கழித்து வீட்டில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் குழந்தை மிதப்பதை பார்த்த நபர் ஒருவர் குழந்தையை மீட்டுள்ளார்.

பின்னர் சிகிச்சைக்காக வெலிகந்த வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.




பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு