04,Dec 2024 (Wed)
  
CH
WORLDNEWS

கிழக்கு நோக்கி நகரும் பூமி – நெருங்கும் பேராபத்து!

2 தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தில் பூமி கிழக்கு நோக்கி சுமார் 80 செ.மீ நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகில் நீரின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதற்காக நிலத்தடி நீர் அடிக்கப்படியாக எடுக்கப்படுவதால், பூமியின் நிலை மோசமாகிவிட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அதிகளவு நிலத்தடி நீரை மனிதர்கள் வெளியேற்றியுள்ளதாக சிடெக் டெய்லி தெரிவித்துள்ளது. இதன் விளைவாக 2 தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தில் பூமி கிழக்கு நோக்கி சுமார் 80 செ.மீ நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1993 மற்றும் 2010-க்கும் இடைப்பட்ட காலத்தில் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீரை மனிதர்கள் வெளியேற்றியதாக காலநிலை மாதிரிகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். மேலும், நிலத்தடி நீரின் பெரும் பகுதியை மேற்கு அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியா பயன்படுத்தியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புவி இயற்பியலாளர் வென் சியோ கூறுகையில் “நிலத்தடி நீர் குறைவது பூமியின் சுழற்சி துருவங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.




கிழக்கு நோக்கி நகரும் பூமி – நெருங்கும் பேராபத்து!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு