21,Nov 2024 (Thu)
  
CH
WORLDNEWS

உலக சாதனைப் படைத்துள்ள இறகு!

முற்றிலும் அழிவடைந்துள்ள நியூசிலாந்தின் "huia" என்ற பறவையினத்தின் ஒரு இறகு ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்பனையாகியுள்ளது. இந்த இறகு 28,400 டொலருக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது உலக சாதனையாகும்.

ஏலத்தில் இந்த இறகு $3,000க்கு விற்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், இந்த பறவையின் இறகே இதற்கு முதலும் அதிகளவு தொகைக்கு விற்பனை செய்யப்படுள்ள போதும், தற்போது அந்த விலையை விட 450% அதிக விலைக்கு இறகு விற்கப்பட்டதாக ஏலத்தை ஏற்பாடு செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது. "huia" பறவை, மாவோரி மக்களால் புனிதமாக கருதப்படுகிறது. 

பறவைகளின் இறகுகளை தொப்பிகளுடன் இணைக்கவும், பரிசாக அல்லது அவற்றை விற்கவும் மக்கள் பயன்படுத்தினர்.

"huia" பறவை இறுதியாக 1907 ஆம் ஆண்டே பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 




உலக சாதனைப் படைத்துள்ள இறகு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு