24,Sep 2024 (Tue)
  
CH
WORLDNEWS

அதிர்ச்சி தகவல் – ஒரு நாளில் 25 மணித்தியாலங்கள்!

பூமி அதன் அச்சில் கிழக்கில் இருந்து மேற்காக சுழல்கிறது. இந்த வேகத்தின் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நாள் 24 மணி நேரத்திற்கு பதிலாக 25 மணி நேரமாக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. பூமி அதன் அச்சில் சுழலும்போது நாளின் நீளம் கூடும். இதன் காரணமாக எதிர்காலத்தில் நாளின் நீளம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, தற்போது ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை பகல் இருக்கும் சூழலில் எதிர்காலத்தில் அது அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து ஜெர்மனியின் மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகையில், பூமியின் வேகத்தில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களால் நிகழ்கிறது.

தற்போதைய வேகத்தில் மாற்றம் ஏற்பட்டால், நாளின் நீளம் மாறலாம் எனவும் கூறப்படுகிறது. பூமியில் 20 அடி ஆழத்தில் வைக்கப்பட்டுள்ள ரிங் லேசர் தொழில்நுட்பம் மூலம் இந்த மாற்றங்களை விஞ்ஞானிகள் கணித்து வருகின்றனர்.

இதன் காரணமாக பூமியில் ஒரு நாள் 24 மணி நேரத்தில் இருந்து 25 மணி நேரமாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த மாற்றம் நிகழ பல ஆண்டுகள் ஆகலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு நாளின் நீளம் 18 மணி நேரம் 41 நிமிடங்களாக இருந்தது. இந்நிலையில் இது 20 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு 25 மணி நேரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பூமியில் ஒரு நாள் 25 மணி நேரமாக அதிகரிக்கும்போது சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.




அதிர்ச்சி தகவல் – ஒரு நாளில் 25 மணித்தியாலங்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு