கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவை பகுதியில் நாளை (08) போக்குவரத்தை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
இதன்படி, வீதியின் இருபுறங்களிலும் உள்ள ஆபத்தான மரங்கள் மற்றும் உக்கிய மரக்கிளைகளை அகற்றும் பணியும், ஆபத்தான பாறை பாகங்களை அகற்றும் பணியும் நாளை காலை 10 மணி முதல் நாளை மறுதினம் (09) காலை 6 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி நாளை மாலை 6 மணி முதல் 3 மணித்தியாலங்களுக்கு குறித்த வீதி முற்றாக மூடப்படும் என மாவனல்லை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், கொழும்பு - கண்டி வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக பின்வரும் மாற்றுப் வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்..
* கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் வரகாபொல, அம்பேபுஸ்ஸ சந்தியில் இடதுபுறம் திரும்பி குருநாகல் வீதீ ஊடாக கண்டிக்கு பயணித்த முடியும்.
* கேகாலை, கரடுபன ஊடாக ரம்புக்கனை மற்றும் மாவனெல்லை ஊடாக ரம்புக்கனை நகருக்கு வந்து ஹதரலியத்த வீதியின் ஊடாக கலகெதர சென்று கண்டிக்கு பயணிக்க முடியும்.
* மாவனல்லை நகரத்திலிருந்து ஹெம்மாதகம ஊடாக கம்பளை வீதி ஊடாக கண்டிக்கு பயணிக்க முடியும்.
0 Comments
No Comments Here ..