ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழுவை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் விழுந்தது. காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் வாகனம் கவிழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். காரில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து திக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து நேற்று (06) மாலை 5.30 மணி அளவில் ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் நோர்வூட் நியூவெலிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றுவிட்டு கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதிக்கு திரும்பிச் சென்ற கார் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிர்திசையில் இருந்து வந்த பஸ்ஸுக்கு வழிவிட முற்பட்ட போது கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது காரில் ஒரு சிறு குழந்தை உட்பட 4 பேர் இருந்துள்ளனர்.
வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 Comments
No Comments Here ..