17,Sep 2024 (Tue)
  
CH
BREAKINGNEWS

பெண்ணை முழுவதுமாக விழுங்கிய மலைப்பாம்பு!

இந்தோனேசியாவில் காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தில் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் 45 வயதான பரிதா வசித்து வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில், அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

நேற்று பரிதாவின் உடைகளைக் கிராமத்தின் அருகே அவரது கணவர் கண்டுபிடித்த நிலையில் தேடுதலைத் தீவிரப்படுத்திய கிராமத்தினர் 5 மீட்டர் நீளமுடைய 16 அடி பைத்தான் வகை மலைப்பாம்பை அப்பகுதியில் பார்த்துள்ளனர்.

சந்தேகமடைந்த அவர்கள் மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து பார்த்தபொழுது உள்ளே பரிதாவின் ஆடைகளுடன் உடல் முழுதாக ஜீரணிக்கப்படாமல் இருந்துள்ளது. 

இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானது என்றாலும் சமீப காலங்களாக இந்தோனேசியாவில் இதுபோன்று மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

கடந்த வருடம் தினாகியா மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 8 அடி மலைப்பாம்பால் விழுங்கப்பட்டார். 

2018 இல் சுலானீஸ் மாகாணத்தில் 54 வயது பெண் ஒருவர் 7 ஆடி மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.




பெண்ணை முழுவதுமாக விழுங்கிய மலைப்பாம்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு