ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமை கண்காணிப்பு அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை டிக் டொக் நிறுவனத்திற்கு 530 மில்லியன் யூரோக்கள் ($600 million) அபராதம் விதித்துள்ளது.
டிக் டொக் செயலி மூலமாக ஐரோப்பாவில் உள்ள பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக சீனாவுக்கு மாற்றியதாகவும், சீன அதிகாரிகள் அணுகுவதிலிருந்து அந்தத் தரவுகள் பாதுகாக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கத் தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமை சட்டத்தை மீறும் செயலாகும். நான்கு வருடங்களாக ஐரிஷ் தரவு பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணையின் முடிவாகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், "சட்டவிரோத வழிகளில் தரவுகளை சேகரிக்கவோ அல்லது சேமிக்கவோ எந்தவொரு நிறுவனத்தையும் தனிநபரையோ சீனா ஒருபோதும் கோரியதில்லை, கோரவும் மாட்டாது" எனவும்.
அனைத்து நாடுகளின் நிறுவனங்களுக்கும் நியாயமான, நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற வணிகச் சூழலை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அயர்லாந்துக்கு சீனா அழைப்பு விடுத்தது. அத்துடன் இந்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக டிக் டாக் தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..