18,Jun 2026 (Thu)
  
CH
உலக செய்தி

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவரை டிரம்ப் நிர்வாகம் நாடுகடத்தி வருகிறது. 


அண்மையில்  இந்தியர்கள் கை, கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு இராணுவ விமானத்தில் நாடுகடத்தப்பட்டது இந்திய மத்திய அரசின் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது. 


இந்நிலையில், டெல்லியில் இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், புலம்பெயர்ந்தோர் விவகாரங்களில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு உள்ளது. 


சட்டவிரோத வகையில் வசிக்கும் அல்லது பயணிக்கும் இந்திய குடிமக்களை நாடு கடத்தும் விடயத்தில், அவர்களை பற்றிய விபரங்களை பெற்றதும், நாங்கள் அவர்களை அமெரிக்காவிலிருந்து திரும்ப அழைத்து கொள்கிறோம். 


ஜனவரி 2025-ல் இருந்து, 1,080 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 62 சதவீதம் பேர் வர்த்தக விமானங்களில் இந்தியாவுக்குத் திரும்பி உள்ளனர்" என்று தெரிவித்தார்.




அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு