21,Aug 2025 (Thu)
  
CH
உலக செய்தி

பில் கேட்ஸ் தனது சொத்தில் 99% ஆப்பிரிக்க சுகாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு நன்கொடை

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரான 69 வயதுடைய பில் கேட்ஸ் தனது சொத்தில் பெரும்பகுதியை அடுத்த 20 ஆண்டுகளில் ஆபிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை அபிவிருத்தி செய்யப் பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.


சுகாதாரம், கல்வி முன்னேற்றம் முதலியவற்றின் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள ஒவ்வொரு நாடும் செழிப்பை நோக்கிச் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.


செயற்கை நுண்ணறிவு மூலம் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தும் வழிகளைச் சிந்திக்கும்படி அவர் இளையர்களைக் கேட்டுக்கொண்டார்.


அடுத்த 20 ஆண்டுகளில் தமது சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்கபோவதாகவும், 2045 ஆம் ஆண்டுக்குள் தமது சொத்தின் மதிப்பு 200 பில்லியன் டொலரை எட்டிவிடும் எனவும் கேட்ஸ் சென்ற மாதம் தெரிவித்திருந்தார்.


20 ஆண்டுகளின் இறுதியில் தமது அறக்கட்டளையின் செயல்பாடுகள் நிறுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.




பில் கேட்ஸ் தனது சொத்தில் 99% ஆப்பிரிக்க சுகாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு நன்கொடை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு