மத்திய கிழக்காசிய நாடான ஈரானில் ஐ.எஸ்., அல்-கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன.அவர்கள் அப்பாவி மக்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது.
இதனை கட்டுப்படுத்த பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை நடத்தப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் போல வேடமிட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவி ராணுவ வீரர்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக ராணுவ வீரர்களும் பயங்கரவாதிகள் சிலரை கொன்றனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கி, வெடிகுண்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பயங்கரவாதிகள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி ஈரான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.













0 Comments
No Comments Here ..