22,May 2025 (Thu)
  
CH
உலக செய்தி

ஈரானின் மூன்றாவது செயற்கை கோள் முயற்சியும் தோல்வி!

நீண்டகால விண்வெளி திட்டங்களுள் ஒன்றான, ஜாபர் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதில் ஈரான் தோல்வி கண்டுள்ளதாக ஈரானின் விண்வெளி திட்டங்களுக்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் ஹொசைனி தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செயற்கைக்கோளை பூமியின் சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்பட வேண்டிய விண்கலம் அதன் வேகத்தை எட்ட முடியவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

எனினும், ஈரானிய விண்வெளி வல்லுநர்கள் தரவுகளை ஆராய்ந்து செயற்படுவார்கள் எனவும், சிக்கல்களை சரி செய்து செயற்கைக்கோளை மீண்டும் ஏவுவதற்கு தயார் செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

செயற்கைக்கோள் ஜாபரை 540 கி.மீ உயரத்துக்கு அனுப்பியது, ஆனால் தகுந்த வேகம் இல்லாததால் இந்த செயல்முறை முழுமைப் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

90 கி.மீ தூரமுள்ள ஜாபர் வண்ண கேமராக்கள் பொருத்தப்பட்ட தொலைநிலை உணர்திறன் கொண்ட செயற்கைக்கோள் ஆகும்.

விண்வெளியிலிருந்து எண்ணெய் இருப்பு, சுரங்கங்கள், காடுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஈரான் விண்ணில் செலுத்திய இரண்டு செயற்கைக்கோள்களும் தோல்வியடைந்த நிலையில், தற்போது மூன்றாவது செயற்கை கோள் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.





ஈரானின் மூன்றாவது செயற்கை கோள் முயற்சியும் தோல்வி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு