23,Nov 2024 (Sat)
  
CH
உலக செய்தி

கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1016 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

உலகம் முழுவதும் இலங்கை, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.

அதேவேளை, 40 ஆயிரத்து 640 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இது குறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,011 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கூடுதலாக 2 ஆயிரத்து 97 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வைரஸ் வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், தற்போது எறும்பு தின்னியிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.





கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு