09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

யேமனில் விழுந்து நொறுங்கிய விமானம் தங்களுடையது என சவுதி அரேபியா அறிவிப்பு!

யேமனில் விழுந்து நொறுங்கிய விமானம், தங்களுடைய விமானம் என சவுதி அரேபியா ஒப்புக் கொண்டுள்ளது.

எனினும், விழுந்து நொறுங்கியதை அந்த விமானத்தை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சுட்டு வீழ்த்தியதை சவுதி அரேபியா உறுதியாகத் தெரிவிக்கவில்லை.

மேலும், விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த விமானிகளை நோக்கி ஹவுத்தி சர்வதேச சட்டத்துக்குப் புறம்பாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் யேமனுக்கான சவுதி கூட்டுப் படை தெரிவித்தது.

எனினும், அந்த இரு விமானிகளும், உயிருடன் உள்ளனரா அல்லது உயிரிழந்தனரா என்ற விபரத்தை சவுதி அரேபியா வெளியிடவில்லை.

யேமனின் வடக்கே அமைந்துள்ள அல்-ஜாஃப் மாகாணத்தில், அரசுப் படையினருக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான டொர்னாடோ ரக போர் விமானம் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கியது.

அந்த விமானத்தை, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்; கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழந்தனர்.





யேமனில் விழுந்து நொறுங்கிய விமானம் தங்களுடையது என சவுதி அரேபியா அறிவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு