04,May 2024 (Sat)
  
CH
சமையல்

விறால் மீன் _மாங்காய்_ குழம்பு

விறால் மீன் மாங்காய் குழம்பு - மீன் குளம்பு என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும் அதுவும் விறால் மீன் குளம்பு மாங்காய் சேர்ந்து ஒரு பிடி பிடிச்சா எப்படி இருக்கும் சொல்லவே வாயூறு... நீங்களும் செய்து சாப்பிட்டுப் பாருங்க.....


தேவையான பொருட்கள்:

விறால் மீன் துண்டுகள் - 6

எண்ணெய்-தேவைக்கேற்ப

சின்ன வெங்காயம்-20

பூண்டு-20

வெந்தையம்-1/2 tsp

கறிவேப்பிலை-சிறிதளவு

தக்காளி-2

மாங்காய்-2

புளி-1 tbsp

மிளகாய் பொடி-1tbsp

கொத்தமல்லி பொடி-2tsp

மஞ்சள்-1tsp

செய்முறை:


விறால் மீனை நன்றாக கழுவி அதில் சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

வெங்காயம்,பூண்டு மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டடி கொள்ளவும்.

மாங்காவை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் வெந்தையத்தையும்,கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும்.

அதில் வெங்காயம்,பூண்டு,மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

பிறகு புளியை கரைத்து அதில் மிளகாய் பொடி,கொத்தமல்லி மற்றும் மஞ்சள்பொடி சேர்த்து அதனுடன் மாங்காயையும் சேர்த்து கொதிக்கவிடவும்.

பிறகு மீனை சேர்த்து கொதிக்கவிடவும்.இப்போது விறால் மீன் குழம்பு தயார்.

கடைசியில் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் கூடுதல் மனம் கிடைக்கவும்.

 





விறால் மீன் _மாங்காய்_ குழம்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு