09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

வைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க சீனா முடிவு

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1770ல் இருந்து 1900 ஆக அதிகரித்துள்ளது. 72,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்களின் உயிரை காப் ற்ற டாக்டர்கள் 24 மணி நேரமும் போராடி வருகின்றனர். ஆனால், டாக்டர்களே கொரோனாவுக்கு பலியாவது மேலும் சோகத்தை அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதல் அதிகமான வுகானின் வுச்சங் மருத்துவமனையின் இயக்குநர் லியு ஜிமிங் நேற்று காலமானார்.

வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க சீன அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி தும்மினாலோ, இருமினாலோ அதனால் வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் வழியாகக் கூட கொரோனா பரவும் வாய்ப்புள்ளது.

இதனால் நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த கரன்சி நோட்டுகள் மூலமாகவும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. எனவே, ஹூபெய் மாகாணத்தின் மருத்துவமனை, ஷாப்பிங் மால்கள், பேருந்துகள் போன்றவற்றில் வசூலான கரன்சி நோட்டுகளை அழிக்க சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதியில் உள்ள வங்கிக்கு வரும் நோட்டுகளை 14 நாட்கள் அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பத்தில் வைத்து நோட்டுகளை அழிக்க அனைத்து வங்கிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா ஏற்கனவே அறிவித்தபடி சி17 விமானத்தில் மருந்து பொருட்கள் நாளை அனுப்பப்பட உள்ளது.




வைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க சீனா முடிவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு