குறைந்த வருமானம் பெறும் மற்றும் நிபுணத்துவம் அற்ற குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் செயற்திட்டத்திற்கு இதுவரை 3 இலட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பப் படிவங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தொலைதூர நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைய ஒரு இலட்சம் வேலையற்றோருக்கு தொழில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
வறுமைக் கோட்டின் கீழுள்ள சமுர்த்தி பயனாளர்களின் குடும்பங்கள் மற்றும் தகுதியிருந்தும் சமுர்த்தி பெறாத குடும்பங்களின் முன்னேற்றத்தை மையப்படுத்தி இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 26, 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் குறித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக தொழில்வாய்ப்பு பெறுவோருக்கு 06 மாத கால பயிற்சி வழங்கப்பட்டதன் பின்னர் அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கு ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் 300 மற்றும் 350 பேர் வரை தேர்ந்தெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..