24,Nov 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

மாத்தறை முதல் ஹம்பந்தோட்டை வரையான அதிவேக நெடுஞ்சாலை! இன்று முதல் பொதுப் போக்குவரத்து சேவை

தெற்கு அதிவேகப் பாதையின் மாத்தறை முதல் ஹம்பந்தோட்டை வரையான பகுதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் பொதுப் போக்குவரத்து சேவை இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தெற்கு அதிவேகப் பாதையின் மாத்தறை முதல் ஹம்பந்தோட்டை வரையான பகுதி நேற்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது

இதன் பிரதான நிகழ்வாக பாலடுவ நுழைவுப் பாதை திறந்து வைக்கப்பட்டதுடன், பின்னர் பரவகும்புக வௌியேறும் பாதை மக்களிடம் கையளிக்கப்பட்டது 

இதன்படி, கொழும்பு கோட்டை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான பேருந்துக் கட்டணமாக 880 ரூபாவும் கொழும்பு கோட்டை முதல் தங்காலை வரையிலான பேருந்து கட்டணமாக 680 ரூபாவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, ஹம்பாந்தோட்டை முதல் மாக்கும்புர வரையிலான பேருந்து கட்டணமாக 810 ரூபாவும் தங்காலை முதல் மாக்கும்புர வரையிலான பேருந்து கட்டணமாக 610 ரூபாவும் அறவிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.




மாத்தறை முதல் ஹம்பந்தோட்டை வரையான அதிவேக நெடுஞ்சாலை! இன்று முதல் பொதுப் போக்குவரத்து சேவை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு