09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

ரெனெரிஃப்பில் உள்ள பிரித்தானியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

ரெனெரிஃப்பில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரித்தானியர்கள் அடுத்த மாதம் வரை வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே அவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என ஜெற் 2 விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெற் 2 விமான நிறுவனத்தில் முற்பதிவு செய்த பயணிகள் மார்ச் 10 வரை பிரித்தானியாவுக்கு பயணிக்கமுடியாது என குறித்த நிறுவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு இத்தாலியச் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில், 700 சுற்றுலாப் பயணிகள் ரெனெரிஃப்பில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு அயர்லாந்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பிரித்தானியாவில் நேற்று வியாழக்கிழமை மேலும் மூன்று பேருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

வடக்கு அயர்லாந்தில் இனங்காணப்பட்ட நோயாளி, வடக்கு இத்தாலியில் இருந்து டப்ளின் வழியாகப் பயணம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அயர்லாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில்; வைரஸ் தொற்றுத் தொடர்பாக வலுவான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் மேலும் இரண்டு நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை, உறுதிப்படுத்தினர். வடக்கு இத்தாலி மற்றும் ரெனெரிஃப் ஆகிய இடங்களில் இருந்தபோது அவர்கள் இருவருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

டிசெம்பர் மாதம் சீனாவில் வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து பிரித்தானியாவில் இதுவரை 19 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

Covid-19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் ரத்துச் செய்யப்படுவது குறித்துக் கவனத்தில் எடுக்கவேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வைரஸ் தீவிரமடைந்தால் மிக நீண்ட காலத்திற்கு பாடசாலைகளை மூடுவதும், மக்கள் ஒன்று கூடுவதைத் தடுப்பதும் அவசியம் என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி தெரிவித்துள்ளார்.





ரெனெரிஃப்பில் உள்ள பிரித்தானியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு